Friday, May 16, 2008

எதையோத் தேடும்வழியில்...

என்னிடமில்லை மூளை
எங்காவது ஆழ்சிந்தனையில்
இங்கில்லா நிலையில்...
பட்டுத் தெறிக்கப் பொருட்களில்லை
கழற்றி எறியப்பட்டது அது!
எழுத்துக்கள் புதைகின்றன
நுண்பசுங்கொழுந்தின் நுனியதன்
நல்வலுவறியாது எப்பொழுதும்போல்!!!

இருக்கட்டும் அதற்குமேலென்ன?
--
புத்தனின் நிலையெனினும்
தேடுதல் முடியுமோ?
தொடக்கத்தின் எல்லையில்
தொக்கித் தெரியும் முடிவிலியின் முடிவு...
தேடி நின்றுச் சுற்றிச் சுழல்கிறேன்
நிற்குமிடம் அறிகிலேன்
அடிவானின் பேரொளி
எல்லையெங்கும் பரந்து கிடக்க
எட்டிப்பிடிக்க வேண்டித்
தொடரொளி நோக்கி..
தொடரது தொடரே தானோ?!
அருகிற் செல்லச்செல்ல
அலைநீளம் இயற்புரைக்கும்
அவை விரவிக்கிடப்பவையாவென..